தொடர்ந்து சதமடிக்கும் சின்ன வெங்காயம் – பொதுமக்கள் அதிர்ச்சி

சின்ன வெங்காயத்தின் விலை இன்று ரூ.130-ஐ தொட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த வாரத்தைவிட…

சின்ன வெங்காயத்தின் விலை இன்று ரூ.130-ஐ தொட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த வாரத்தைவிட இந்த வாரம் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. வரத்து குறைவு காரணமாக இஞ்சி மற்றும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

குறிப்பாக சின்ன வெங்காயம் தான் பொதுமக்களுக்கு அதிகளவில் அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்று முன்தினம் கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை சதம் அடித்தது. அடுத்தடுத்த நாட்களில் விலை குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். காரணம் இன்று கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயம், ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் : அண்டை மாநிலங்களில் வெளியானது ‘லியோ’ – விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!!

தமிழ்நாட்டில் வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட வெங்காயத்தின் விலை தொடர்ந்து சதமடித்து வருவதால், பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். பண்டிகைக் காலம் என்பதாலும், ஆங்காங்கே மழை பெய்து வருவதாலும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.