கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய்!

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் நாளை (நவம்பர் 7) தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி, தமிழக முதலமைச்சர் விஜய் தனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடிப்பு, இயக்கம், தயாரிப்பு எனப் பல்வேறு துறைகளில் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கமல்ஹாசன். திரையுலகைக் கடந்து அரசியலிலும் ஈடுபட்டு வரும் அவர், மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி பொதுவாழ்விலும் பயணித்து வருகிறார். அவர் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாகவும் உள்ளார்.

இந்நிலையில், அவரது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “அன்பிற்கினிய கமல்ஹாசன் அவர்களுக்கு, தங்களின் 07.11.2026-ஆம் தேதிய பிறந்தநாளையொட்டி, என்னுடைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவும், தாங்கள் கலைத்துறை மற்றும் பொது வாழ்வில் மேலும் பல சிறப்புகளைப் பெற்று, மக்களுக்கான தங்கள் அர்ப்பணிப்பான பணிகளைத் தொடர்ந்து சிறப்புடன் ஆற்றிட என் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!” என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.