முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

வெடிச்சத்தம் கேட்ட காஷ்மீரில் நிலைமை மாறியுள்ளது – காஷ்மீர் கலைஞர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

காஷ்மீரில் வெடிச்சத்தம் கேட்டால், வெடித்தது எந்த வகை துப்பாக்கி, என்ன வகை குண்டு உள்ளிட்டவற்றை கூறக்கூடிய அளவிலான சூழல் இருந்தது என்றும், தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில்
‘விட்டாஸ்டா 2023 விழாவில்’ பங்கேற்க ஜம்மு காஷ்மீரில் இருந்து சென்னை வந்த கைவினை பொருள் கலைஞர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். இதில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த கைவினைப் பொருள் கலைஞர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “மத்திய அரசு சுதந்திர திருநாள் அமிர்த பெருவிழாவில், இது போன்ற நிகழ்வை உருவாக்கியதை நான் வெகுவாக பாராட்டுகிறேன். இந்த அமிர்த பெருவிழாவில் இது போன்ற நிகழ்வுகள் மூலமாக இந்தியாவின் கலாச்சாரத்தை நம்மால் மீண்டும் காணமுடிகிறது.

காஷ்மீரில் வெடி சத்தம் கேட்டால், வெடித்தது எந்த வகை துப்பாக்கி, என்ன வகை குண்டு உள்ளிட்டவற்றை கூறக்கூடிய அளவிலான சூழல் இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது. காஷ்மீர் மக்கள் அமைதியும், அன்பையும் விரும்பும் மக்கள். காஷ்மீரில் உள்ள பண்டிட்களை, தீவிரவாதிகள் குறிவைத்து தாக்குதலை நடத்தினர். இதன் காரணமாக பல்லாயிரம் பண்டிட்கள், காஷ்மீரை விட்டு வெளியேறினர்.

இந்த மோசமான நிலைமை தொடர்ந்து வந்தது. பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. எத்தனை உயிர்கள் பறிபோனது. தீவிரவாதிகளின் ஊடுருவல் குறித்த தகவல் கிடைத்ததும், ராணுவ வீரர்கள் எதிர்கொள்ள செல்வார்கள். இதில் பாதி ராணுவ வீரர்கள் மட்டுமே திரும்பி வரும் நிலை இருந்தது. இந்த நிலைமைகள் தற்போது மாறத் தொடங்கியுள்ளன.

சென்னை மட்டும் தமிழ்நாடு அல்ல. தமிழ்நாடு மிகப்பெரிய மாநிலம். மிகப்பெரிய கலாச்சாரம் உள்ள மாநிலம். இங்கு வந்தோம், கலை நிகழ்ச்சியில் ஈடுபட்டோம் என்று இல்லாமல், நீங்கள் மாநிலம் முழுவதும் சென்று இங்குள்ள கலாச்சாரத்தை காண வேண்டும். இது தொடர்பாக மத்திய கலாச்சாரத்துறையிடம் நான் பேசுகிறேன். நீங்கள் அடுத்த மார்கழியில் இங்கு வரவேண்டும். அதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்கிறேன். இதேபோல் இங்குள்ள கலைஞர்களை நீங்கள் அழைத்து சென்று அங்கு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரதமர் மோடியை கண்டு பயப்படவில்லை- ராகுல்காந்தி

Web Editor

நாமக்கலில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பெண்கள் விழிப்புணர்வு!

Jeba Arul Robinson

திருப்பதியில் திருமணம் செய்து கொண்ட ரவீந்தர் சந்திரசேகர் – மகாலக்ஷ்மி

EZHILARASAN D