அடுத்த பத்தாண்டுகளில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை எட்டும் என செயற்கை நுண்ணறிவு ஆய்வு கூறுகிறது.
அடுத்த பத்தாண்டிற்குள் தொழில்துறை மட்டங்களில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை எட்டும் என செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. அத்துடன் இந்த அறிக்கை புவி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச்சூழலில் பேரழிவு விளைவுகள் குறித்து எச்சரிக்கை மணியை ஒலிக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் கொலராடோ ஸ்டேட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பூமியானது இரண்டு டிகிரி செல்சியஸ் வெப்பத்தை எட்டும் பாதையில் இருப்பதாகவும், அடுத்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் அது நிகழும் வாய்ப்பு 50 சதவிகிதம் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.
“ஏற்கனவே நடந்த ஒரு செல்சியஸில் புவி வெப்பமயமாதலின் இருந்து வெவ்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளின் தாக்கம் பற்றிய தெளிவான சான்றுகள் எங்களிடம் உள்ளன” என்று ஆய்வின் இணை ஆசிரியரான ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக காலநிலை விஞ்ஞானி நோவா டிஃபென்பாக் கார்டியனிடம் தெரிவித்துள்ளார். ”
பரந்த அளவிலான தரவுகளில் கொண்ட ஒரு வகை AI இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். உலகளாவிய காலநிலை மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்ய விஞ்ஞானிகள் இந்த அமைப்பைப் பயிற்றுவித்துள்ளனர்.
இதன்மூலம், 2044 மற்றும் 2065 க்கு இடையில் இரண்டு டிகிரி வரம்பை கடக்க 70 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக AI முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த AI முடிவுகள் எவ்வளவு துல்லியமானது என்பதைக் கண்டறிய தற்போதைய புவி வெப்பத்தின், வரலாற்று அளவீடுகளைக் கணினியில் உள்ளிடப்பட்டன. 1980 முதல் 2021 வரையிலான தரவுகளைப் பயன்படுத்தி ஆய்வு செய்ததில் 2022 இல் பூமி அடைந்த 1.1 டிகிரி செல்சியஸ் குறித்த சரியான வெப்பநிலையை AI கண்டறிந்தது.
ஏறக்குறைய 200 நாடுகள் பல ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு புவியை இரண்டு டிகிரிக்கு வெப்பநிலைக்குக் கீழே வைத்திருப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர். 1.5 டிகிரி செல்சியஸை குறிவைப்பது “காலநிலை மாற்றத்தின் அபாயங்களையும் தாக்கங்களையும் கணிசமாகக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சூழலியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.