தளபதி 67 படத்தின் கதை இதுதானா? – என்ன திட்டம் வைத்துள்ளார் லோகேஷ்…

 தளபதி 67 படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி இந்த செய்திக் குறிப்பில் பார்ப்போம். தளபதி விஜய்யின் வாரிசு படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியைத் தக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து தளபதி 67 படத்தின்…

 தளபதி 67 படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி இந்த செய்திக் குறிப்பில் பார்ப்போம்.

தளபதி விஜய்யின் வாரிசு படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியைத் தக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து தளபதி 67 படத்தின் அப்டேட் எப்ப வரும் எப்போது வருமென்று காத்திக்கிட்டு இருந்த நிலையில், படத்தில் இடம்பெற்றிருக்கத் தொழில் நுட்ப கலைஞர்களை மட்டும் சொல்லி கொஞ்சம் அப்சட் ஆக்கிட்டாங்க. இருந்தாலும், தற்போது பிரியா ஆனந்த், சஞ்சய் தத் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க உள்ளதா அதிகாரப்பூர்வ அறிவிப்ப வெளியிட்டார்கள் படக்குழுவினர்.

ஆனால் அதக்கு முன்னாடி 2005-ல வெளியான A History of Violence- என்ற ஹாலிவுட் படத்த்தின் உரிமையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ்  வாங்கியதாகத் தகவல் வெளியானது. A History of Violence-ன்ற படம் ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும். அதாவது ஒரு ஹோட்டலில் 2 நபர்களைக் கொலை செய்வார் ஹீரோ. அதன் மூலம் ரௌடியாக மாறுவதுதான் கதை. தமிழ் படத்தோட ஒப்பிட வேண்டும் என்றால் ரஜினியின் பாட்ஷா பட பாணியில் இருக்கும். அதன்படியே படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளதால் இப்படம் காஷ்மீரில் உள்ள பெரிய ஹோட்டலில் எடுக்கலாம் இல்லையென்றால் A History of Violence படத்தின் One line-அ மட்டும் வைத்து படம் எடுக்கலாம் என அடுத்தடுத்து பேசப்படுகிறது. ஒரு வேலை A History of Violence படத்தைப் போலவே எடுத்தால் கண்டிப்பாகத் தளபதி 67 படம் விஜய்க்கு மீண்டும் ஒரு மாஸ் படமாக அமையும் என்று பேசப்படுகிறது.

இப்படிப் பல ரகசியங்களுடன் இருக்கும் தளபதி 67 படத்தைக் குறித்த அறிவிப்புகள், ஒரு விமான பயணம் காட்டிக்கொடுத்து விட்டது. படப்பிடிப்புக்காகக் காஷ்மீர் சென்ற படக்குழுவினரின் பட்டியல் Spicejet-ன் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதை அருமையாக இணையவாசிகள் கண்டுபிடித்துவிட்டனர். படத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய மொத்த தகவலையும் Spicejet-ன் இணையதளத்திலிருந்து எடுத்து இணையவாசிகள் வீடியோவாக வெளியிட்டனர். இதன் மூலம் திரிஷா, சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பது உறுதியானது. கடைசியில் என்ன பண்ணாலும் மண்டமேல உள்ள கொண்டைய யாராலையும் மறைக்க முடியாதுன்ற மாதிரி ஆகிருச்சு.

-சுஷ்மா சுரேஷ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.