பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவின் முதல் கால யாக வேள்வி பூஜையுடன் தொடங்கிய நிலையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் அமைந்துள்ள அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இத்தலத்தில் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய தினங்கள் மட்டும் திருக்கோயில் திறந்து இருக்கும். மற்ற நாட்களில் அருகில் உள்ள பெரியசாமி மலையில் அம்மன் அருள் புரிவதாக கூறப்படுகிறது.
இதனிடையே இத்திருக்கோயிலில் ஏப்.5ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் முதல் கால யாக வேள்வி பூஜையோடு தொடங்கியது. இதனையடுத்து கடங்களில் புனித நீர் நிரப்பபட்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக யாகசாலையில் வந்தடைந்த பின் கும்ப அலங்கார பூஜைகளுக்கு பிறகு பல்வேறு மூலிகை பொருட்கள் யாக வேள்வியில் செலுத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
மேலும் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷியாமளா தேவி உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
File name
BKT-ARY-PBR 02.04.2023 SlRUVACHUR KOVIL KUMPAPISEKAM YAGAVELV
கா. ரூபி







