தமிழகம் செய்திகள்

மகளிர் கலை விழா; சின்னத்திரை நடிகைகள் பங்கேற்பு!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் கலை விழாவில் சின்னத்திரை நடிகைகள் பங்கேற்றுனர்.

ஈரோடு மாவட்டம் வரதம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சத்தியமங்கலம் தனியார் நகைக்கடை சார்பில் நடைபெற்ற  மகளிர் கலை விழாவை சத்தியமங்கலம் நகரமன்ற தலைவி ஜானகி ராமசாமி, காமதேனு கலை அறிவியல் கல்லூரி தாளாளர் பெருமாள் சாமி மற்றும் சத்தியமங்கலம் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக, சின்னத்திரை நடிகைகளான ராஜா மகள் நடிகை ஐரா அகர்வால், பாண்டவர் இல்லம் கிருத்திகா, ராஜா ராணி அர்ச்சனா ,மீனாட்சி பொண்ணு பிரணிகா ஆகியோர் கலந்து கொண்டனா்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் விழாவில் சிறுவர் சிறுமிகள் நடனம், மனைவி கணவனுக்கு சேலை கட்டி விடும் போட்டி, கணவன் மனைவிக்கு வளையல் அணியும் போட்டி போன்ற நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில்  வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்து கொண்டவர்களுக்கும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.

—கா. ரூபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram