நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘ஜாலியாக இருந்த ஒருத்தன்’. ராஜேஷ் இயக்கும் இப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் “ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்” நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற “சிவா மனசுல சக்தி” திரைப்படத்திற்கு பிறகு 16 ஆண்டுகள் கழித்து நடிகர் ஜீவா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனார் ராஜேஷ் ஆகியோரின் கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
‘ஜாலியாக இருந்த ஒருத்தன்’ திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு…!
ஜாலியாக இருந்த ஒருத்தன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.



