சித்தார்த் குரலில் ‘உனக்குத்தான்’ பாடல் | வைரலாகும் வீடியோ பதிவு!

இலங்கையில் நடைபெற்ற சந்தோஷ் நாராயணன் இசைக் கச்சேரியில், சித்தா படத்தில் இடம்பெற்ற ‘உனக்குத்தான்’ பாடலை சித்தார்த் பாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் தனக்கென தனி…

இலங்கையில் நடைபெற்ற சந்தோஷ் நாராயணன் இசைக் கச்சேரியில், சித்தா படத்தில் இடம்பெற்ற ‘உனக்குத்தான்’ பாடலை சித்தார்த் பாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் சந்தோஷ் நாராயணன். சினிமாவில் குறும்படங்கள் மூலமாக அறிமுகமான இவர், ரஜினியின் காலா மற்றும் கபாலி, மெட்ராஸ் ஆகிய படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவரது இசையில் சமீபத்தில் வெளியான சித்தா, ஜிகர்தண்டா டபுள் X போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் பெரிதும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் ‘நீயே ஒளி’ என்னும் இசைக்கச்சேரியை சென்னையில் வரும் பிப். 10-ம் தேதி நடத்த உள்ளதாக சந்தோஷ் நாராயணன் அறிவித்திருந்தார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த இசைக்கச்சேரியில் 10,000 டிக்கெட்டுகள் ரூ.500க்கு விற்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

இதனையடுத்து ‘நீயே ஒளி’ இசைக்கச்சேரிக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும், தான் ஏற்கனவே தெரிவித்தது போல 10,000 டிக்கெட்டுகள் ரூ.500க்கு விற்கப்படும் எனவும் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த டிக்கெட்டுகள் நியாயமான முறையிலும், எளிதில் கிடைக்கக்கூடிய வகையிலும் விற்பனை செய்யப்படும் என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் நடைபெற்ற தனது இசைக் கச்சேரியில், நடிகர் சித்தார்த் பாடிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார். சித்தா படத்தில் இடம்பெற்ற ‘உனக்குத்தான்’ பாடலை சித்தார்த் பாடும் வீடியோவானது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/Music_Santhosh/status/1738786178357403752

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.