கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்!

சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்.

சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார். இது தொடரபாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபு நீண்டகால சுவாசப் பாதிப்பு காரணமாக, 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதியன்று எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
முறையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் எங்களது பல்நோக்கு மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சிகள் இருந்தபோதிலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது.

அதனைத் தொடர்ந்து, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் விளைவாக, 2026-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதியன்று பிற்பகல் 2:24 மணிக்கு அவர் காலமானார். இந்த இக்கட்டான சூழலில், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எம்.ஜி.எம் ஹெல்த்கேர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.