முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா செய்திகள்

குறைந்தது கொரோனா.. டெல்லியில் கடைகளைத் திறக்க அனுமதி

டெல்லியில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து அனைத்து கடைகளையும், சந்தைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 55 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது அனைத்துக் கடைகளையும் மார்க்கெட்களையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் உணவகங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களிடம் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்கள் 50 சதவீத பயணிகளுடன் தொடர்ந்து இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் கொரோனா பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

Advertisement:

Related posts

டெல்லியில் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!

Halley karthi

முதலாமாண்டு மாணவர்களுக்கான ஆய்வக வகுப்புகளை வரும் 6ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!

Gayathri Venkatesan

7வது நாளாக தொடரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு!

Jeba Arul Robinson