சென்னை துறைமுகத்தில் நடைபெறும் நிகழ்வில், கொடியசைத்து கப்பல் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., தயாநிதிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 11 தளங்கள் கொண்ட இந்தியாவின் பெரிய சொகுசு கப்பல்களுள் ஒன்றாக அமைந்துள்ளது Cordelia Empress. செப்டம்பர் 23 வரை சென்னையிலிருந்து ஆழ்கடல் சுற்றுலா, விசாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுலா திட்டங்களுக்கு ஏற்ப கட்டணம்
உணவகங்கள், விளையாட்டு தளங்கள், கலை நிகழ்வுகளுக்கான அரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் கப்பல் சேவை வழங்கப்படவுள்ளது. விருந்து, கொண்டாட்டங்கள் மட்டுமல்லாமல் ஆழ்கடல் பகுதியில் திருமணங்கள் நடத்துவதற்கும், அலுவலக மீட்டிங்குகளுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை, துறைமுகத்தில், கார்டிலியா குருசஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடல்வழி எம்பிரஸ் சொகுசு கப்பல் சுற்றுலாப் பயணத்தை தொடங்கி வைக்கும் விதமாக அதற்கான கேடயத்தினை கப்பல் கேப்டன் திரு. டேனிஸ் கொரூப் அவர்களிடம் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அக்கப்பலையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.
-மணிகண்டன்








