முக்கியச் செய்திகள் தமிழகம்

வடசென்னையில் பிரமாண்ட விளையாட்டு வளாகம் – அமைச்சர் அதிரடி

தமிழகயை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில் விளையாட்டுத்துறைக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

உலகின் மிகப்பிரபலமான செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கு சர்வதேச அளவில் பல நாடுகள் போட்டிப்போடும். இதுவரை இந்தியாவில் நடத்த வாய்ப்பே கிடைக்காமல் இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு திமுக அரசின் முயற்சிகளின் பலனாக முதல் முறையாக ஒலிம்பியாட் 2022 சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் 150 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


மேலும், பல ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல் எனும் திட்டம் செயல்படுத்த ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வட சென்னையில் இளைஞர்கள் திறனை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் விளையாட்டு வசதிகள் மற்றும் பயிற்சியாளர்களுடன் கூடிய விளையாட்டு வளாகம் உருவாக்கப்படும்.

சென்னை ராதாகிருஷ்ணன் நகரில் முதற்கட்டமாக ரூ.10 கோடி செலவில் வளாகம் அமைக்கப்படும். இதன் மூலம் இங்கு கைப்பந்து, பூ பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கபடி மற்றும் நவீன உடற்பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு போட்டிகளை சிறப்பாக நடத்தி முடிக்க அரசு முழு ஒத்துழைப்பு. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.293 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram