காரைக்குடியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண் உட்பட மூவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவிகள், அங்குள்ள அழகு நிலையம் ஒன்றிற்கு சிகை அலங்காரம் செய்வதற்காக சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு பணி புரிந்துவந்த விக்னேஷ் மற்றும் மன்ஸில் ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காரைக்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், லட்சுமி, விக்னேஷ் மற்றும் மன்ஸில் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
பள்ளியில், மாணவிகளை கண்காணிக்க தவறியதாக கூறி, வகுப்பு ஆசிரியை ஒருவரை பணியிடை நீக்கம் செய்து, பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.







