பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞர் போக்சோவில் கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.   அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில்…

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.  

அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் 12ம் படித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் பள்ளி விடுமுறையில் மூன்று மாதம் அதே பகுதியில் உள்ள ஜவுளிகடையில் சிறுமி பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது ஜவுளி கடைக்கு வரும் காஞ்சிரங்குளத்தை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் பாலமுருகன் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

திடீரென ஒருநாள் சிறுமியை காதலிப்பதாக கூறிய பாலமுருகன், தனியாக பேசலாம் என அழைத்து சென்று யாரும் இல்லாத இடத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்துடன் இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இந்நிலையில், சிறுமியின் வயிறு பெரிதாக இருப்பதை கண்டு சந்தேகமடைந்த அவரின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 8 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து விசாரித்தபோது, ஆட்டோ ஓட்டுநர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக அச்சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் பாலமுருகனை கைது செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.