மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியரை தாக்கிய உறவினர்கள்

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் மீது மாணவியின் உறவினர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒட்டிசெரு கிராமத்தில் மேல்நிலைப் பள்ளி இயங்கி…

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் மீது மாணவியின் உறவினர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒட்டிசெரு கிராமத்தில் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பயிலும் மாணவி, ஆசிரியர் ஒருவர் தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியரை வெளியே வரச்சொல்லி கடுமையாக தாக்கியுள்ளனர்.

அப்போது தான் மாணவியிடம் தவறாக நடக்கவில்லை எனவும், மாணவி சரியாக படிக்காததால் அவரை கண்டித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த மற்ற ஆசிரியர்கள் மாணவியின் உறவினர்களை தடுத்த நிலையில், அவர்கள் மீதும் மாணவியின் உறவினர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்த போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.