“அதிமுகவுக்காக உழைக்கும் உன்னத தொண்டர் செங்கோட்டையன்” – ஓபிஎஸ் பேட்டி!

அதிமுகவுக்காக உழைக்கும் உன்னதத் தொண்டர் செங்கோட்டையன் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

"Sengottaiyan, a noble volunteer working for AIADMK" - OPS interview!

கோவை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

“அதிமுகவுக்கு உழைக்கும் உன்னதத் தொண்டர் செங்கோட்டையன். அவர் கட்சிக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர், எதையும் எதிர்பார்க்காமல் உழைப்பவர். நானும் அவரும் இணைந்து கட்சிக்காக பணியாற்றி இருக்கிறோம். ஆர்.பி.உதயகுமார்ருக்கு எல்லாம் பதில் சொல்ல நான் தயாராக இல்லை. அவர்கள் பேசுவதை பேசட்டும், மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றுதான் தொண்டர்கள் விரும்புகின்றனர். கட்சி ஒன்றிணைந்தால்தான் தேர்தலில் வெல்ல முடியும் என்பதை தொண்டர்கள் உணர்ந்துள்ளனர். கட்சி ஒருங்கிணைப்புக்கான பேச்சு நடக்கிறது, அந்த ரகசியத்தை வெளியே சொல்ல முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கான வாக்குகள் குறைந்துள்ளன. 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளனர்.

அதிமுகவின் விசுவாச தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் நிற்கிறார்கள். மக்களும் எங்களுக்குத்தான் ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். மத்திய அமைச்சர் அமித்ஷா சொன்ன வியூகங்களை ஏற்காததற்கான பலனை எடப்பாடி பழனிசாமி இன்று அனுபவிக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் வரும் 2026-ல் ஆட்சி அமைப்போம் என்று சொல்கிறார்கள். என் மீது விமர்சனங்களை வைப்பவர்கள் நீண்டநாள் வாழட்டும்”

இவ்வாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.