திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “திமுக தலைவருக்கு நிர்வாகம் செய்ய தகுதி, திறமை இல்லை, மின்சார கட்டணம், சொத்து வரி, உயர்த்தப்பட்டு விட்டது. தமிழக மின் தேவைகளுக்காக 14,000 கோடி யூனிட் மின்சாரம் தேவைப்படும் நிலையில் தமிழக அரசு 2600 கோடி யூனிட் மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. தேவையில் 18 சதவீதம் மட்டுமே மின் உற்பத்தி செய்துள்ளதன் காரணமாக ஏழு ரூபாய் முதல் 15 ரூபாய் வரை ஒரு யூனிட் மின்சாரத்தை வெளி சந்தையில் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்வாரியம் 75 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது.
மோசமான கனிம வள கொள்ளை திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 1439 குவாரிகள் முறைகேடாக நடைபெற்று வருவதாக தமிழக அரசே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கனிம வள கொள்ளையை ஆதரிக்க திருநெல்வேலியில் ஒரு காட்பாதர் இருக்கிறார். அவர் அப்பாவித்தனமாக இருக்கிறார்.
தமிழக அரசுக்கு எதிரான அலை வீசிக் கொண்டிருக்கிறது. வரும் தேர்தலில் அது சுனாமி பேரலையாக மாறி திமுகவை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றும். ஒரு சில வாரங்களில் மெகா கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து ஆட்சிக்கு வருவோம். பள்ளி குழந்தைகள் மது அருந்துவது மோசமான நிகழ்வு. கூட்டணி குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம், விரைவில் மெகா கூட்டணி அமையும் தற்போது யாருடன் கூட்டணி என்பது குறித்த கேள்விக்கு பதில் சொல்ல இயலாது.108 நாட்கள் நடைப்பயணம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்த நடைபயணத்தின் மூலமாக தீர்வு காணப்பட்டுள்ளது.
மது இல்லாமல் தமிழக இளைஞர்கள் இருக்க முடியாத சூழல் தான் திராவிட மாடல். திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிக்கு வரும்போது டாஸ்மாக் வருமானம் 35 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போது 55 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கட்சியிலிருந்து சிலரை நீக்கி உள்ளது. எங்கள் உட்கட்சி பிரச்சனை. திமுகவின் கைக்கூலிகள் அவருக்கு (ராமதாசுக்கு) தவறான செய்திகளை தினம்தோறும் சொல்லி வருகிறார்கள். அங்கு என்ன நடக்கிறது என தெரியவில்லை. எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவின் கைக்கூலிகள் துரோகிகள் தைலாபுரத்தை டேக் ஓவர் செய்து இருக்கிறார்கள்.
எஸ்ஐஆர் பணிகளை வரவேற்கிறோம். போலி வாக்காளர்கள், இறந்தவர்கள் நீக்கப்பட வேண்டும். நேர்மையான வாக்களர் பட்டியல் இருந்தால் தான் தேர்தல் நியாயமாக நடைபெறும். தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். தற்போது புதிய வாக்காளர்கள் சேர்ப்பு விடுபட்டவர்கள் சேர்ப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் மூலம் இறுதி வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 லட்சமாக குறையும்.
போலி வாக்காளர்கள் மூலமாகவே திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று வந்துள்ளது. கடந்த தேர்தலில் ஆயிரம் முதல் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் பல தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வரும் தேர்தலில் திமுக இன்னும் படுதோல்வி அடையும். நேர்மையான கட்சிகளுக்கு எஸ்ஐஆர் பணிகள் நல்ல முடிவாக அமைந்துள்ளது. கடந்த மூன்று தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் பலமாக இல்லாததாலேயே திமுக வெற்றி பெற்றது. இந்த தேர்தல் அப்படி இருக்காது பாஜகவுடன் கூட்டணி குறிப்பு கேள்விக்கு போகப் போக தெரியும் என்று தெரிவித்தார்.
கனிமாவளக் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை இயற்கை கொடுத்த வரம். தொடர்ந்து கொள்ளை நடந்து வந்தால் மலை காணாமல் போக போகிறது. கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டது போல இங்கேயும் நடைபெற வாய்ப்பு உள்ளது. விரைவில் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படும்.
மதுவுக்கு எதிரான வைகோவின் நடைப்பயணம் குறித்த கேள்விக்கு அவர் நேரடியாக முதலமைச்சர் வீட்டு வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தட்டும். 500 கடையையாவது மூட வலியுறுத்தட்டும். கூட்டணியை விட்டு வைகோ வர தயாரா என்று கேள்வி எழுப்பினார்.







