கொரோனா காலத்தில் கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டது : செல்லூர் ராஜூ

கொரோனா காலத்தில் கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டதாக, மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, காளவாசல் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.…

கொரோனா காலத்தில் கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டதாக, மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, காளவாசல் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, தனது 70வது பிறந்தநாளை தொண்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

பின்னர் பேசிய அவர், கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கி இருக்காமல், களத்தில் தான் பணியாற்றியதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையாலேயே கொரோனா கட்டுக்குள் வந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், கொரோனா காலத்தில் கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டதாகவும், சொல்வதை மட்டுமே செய்வது அதிமுக அரசுதான் எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.