தமிழகம் நீர் மேலாண்மையில் முதலிடம் வகிக்கிறது: ஜி.கே.வாசன்!

இந்தியாவிலேயே தமிழகம் நீர் மேலாண்மையில் முதலிடம் வகிப்பதாக எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பரப்புரை மேற்கொண்டார். சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம்…

இந்தியாவிலேயே தமிழகம் நீர் மேலாண்மையில் முதலிடம் வகிப்பதாக எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பரப்புரை மேற்கொண்டார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் பேருந்து நிலையத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் அவர் பேசினார்.

அப்போது பேசிய ஜி.கே.வாசன், தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், மருத்துவம், குடிநீர், சாலை போக்குவரத்து, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு என அனைத்துத் துறைகளும் முன்னேற்றம் அடைந்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். மீண்டும் விவசாயி எடப்பாடி பழனிசாமி முதல்வராக வரவேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.