மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறை: ஸ்டாலினுக்கு சீமான் பதிலடி!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது, மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறை இல்லையா என அதுகுறித்து பேசி வந்த ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான பதில் கேள்வியெழுப்பி…

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது, மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறை இல்லையா என அதுகுறித்து பேசி வந்த ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான பதில் கேள்வியெழுப்பி உள்ளார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் மற்றும் பரமத்திவேலூர் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் பூங்கா சாலையில் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, தேர்தல் வரும் போது மட்டுமே திமுகவும், அதிமுகவும் மக்களை பற்றி சிந்திப்பதாக அவர் சாடினார். மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது குறித்து தற்போதுதான், திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக கூறிய சீமான், சென்னை மேயராக ஸ்டாலின் இருந்தபோது, மனித கழிவுகளை யார் அகற்றினார்கள் எனக் கேள்வி எழுப்பினார். அனைத்து கட்சிகளின் தலைவர்களும், ஒரே மேடையில் நேரடியாக விவாதிக்க தயாரா என்றும் சீமான் சவால் விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.