முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம் தமிழகம்

இருசக்கர வாகன பயணியை தடுத்து நிறுத்திய காவலர்! காமிராவில் பதிவான நெகிழ்ச்சி சம்பவம்!

இருசக்கர வாகன பயணி ஒருவரிடம் மருந்து பாட்டிலை கொடுத்து பேருந்தில் செல்லும் மூதாட்டியிடம் ஒப்படைக்க சொன்ன தமிழ்நாடு காவலர். பேருந்தை தடுத்து நிறுத்தி ஒப்படைத்த இருசக்கர வாகன ஓட்டியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக இருசக்கர வாகனங்களை வழிமறிக்கும் காவல்துறையினை கண்டால் யாருக்குத்தான் பிடிக்கும். அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் நீங்கள் வெளி மாநிலங்களில் பயணிக்கும் போது திடீரென காவல்துறையினால் நீங்கள் தடுக்கப்படும்போது ஏற்படும் மன பீதிக்கு அளவே இருக்காது. ஆனால், தமிழகத்தில் இப்படியொரு சம்பவம் நெகிழ்ச்சிக்குரியதாக மாறியுள்ளது.

கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் தென்காசியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, தமிழக காவல்துறை அதிகாரி ஒருவரால் தடுக்கப்பட்டிருக்கிறார். “கர்நாடகாவா?” என கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு பயணி ஆமாம் என்று பதில் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரி, “இந்த ரோட்டிலேயே அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருக்கிறது. அதில் பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு மூதாட்டி அவரது மருந்து பாட்டிலை மறந்து விட்டு சென்றுள்ளார். அவரிடம் இதை ஒப்படைத்து விடுங்கள்” என தமிழில் கூறியுள்ளார். இதனை தனக்கு புரிந்தவாறு தலையசைத்துக்கொண்டு தனது பைக்கை முடுக்கி முன்னால் சென்ற அரசு பேருந்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.

பின்னர் தனக்கு தெரிந்த அளவில் தமிழில் காவல்துறை அதிகாரி கூறியதை தெரிவித்து மருந்து பாட்டிலை கொடுத்துள்ளார். பின்னர் அவர்களிடமிருந்து விடைபெற்றுள்ளார்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் முழுவதும் இருசக்கர வாகன பயணி தனது தலையில் அணிந்திருந்த ஹெல்மட்டில் பொருத்தப்பட்டிருந்த காமிரா மூலம் ரெக்கார்ட் செய்யப்பட்டு யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 15,000க்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

“இது ஓய்வுக்கான நேரமில்லை” இணையத்தில் வைரலாகும் விராட் கோலி வீடியோ!

Karthick

சிபிஐ வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

Jeba

ஹோட்டலுக்குள் புகுந்த சிங்கம்!

Niruban Chakkaaravarthi