முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அரக்கோணம் இரட்டைக் கொலை சம்பவத்திற்கு சீமான் கண்டனம்!

அரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரக்கோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுனன், சூர்யா ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமடைந்ததாக கூறியுள்ளார்.

தமிழ்ச் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதி என்கிற கொடிய நோயை அறவே ஒழித்தால்தான் இதுபோன்ற கொடூரங்கள் நிகழாமல் இருக்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார். சாதிய வன்மத்தோடும், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு மனித உயிர்களை பறிக்கின்ற இதுபோன்ற கோரச்சம்பவங்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும்
சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement:

Related posts

வாக்கு எண்ணிக்கையின் போது, அதிமுகவினர் சுற்றிச்சுழன்று கண்காணிக்க வேண்டும் : ஓபிஎஸ், இபிஎஸ்

Ezhilarasan

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஜூன் 8ஆம் தேதி வெளியீடு!

Jeba

மக்கள் நலனிற்காக பாடுபடக் கூடியவர்களையே திமுக:ஸ்டாலின்!

Karthick