எமதர்ம ராஜ வேடத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய நபர்!

உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் எமதர்ம ராஜவின் வேடத்தில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வைப் ஏற்படுத்தியுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் இதுவரை 1,30,60,542 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,67,642 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.…

உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் எமதர்ம ராஜவின் வேடத்தில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வைப் ஏற்படுத்தியுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 1,30,60,542 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,67,642 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,19,13,292 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால், பஞ்சாப், டெல்லியில் இரவு ஊரடங்கு அமலில் உள்ளது. திரையரங்குகள் மற்றும் வணீக வளாகங்கள் 50 % மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்ற விதிமுறைகளும் அமலில் இருக்கிறது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள, விழிப்புணர்வுடன் இருக்க உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் எமதர்ம ராஜாவைப்போல ஆடை அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இவர் எமதர்மனைப்போல் நகைகள் அணிந்து கொண்டு, பாசக்கயிற்றுடனும், அருகில் ஒரு எருமை மாட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ’பூமியின் மக்களே, எனது வேலையை அதிகரிக்காதீர்கள், மாஸ்க் அணிந்து உங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ளுங்கள்’ என்ற வசனங்களைப் பேசி அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இவரது செயல், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.