‘Racing Isn’t Acting’- அஜித் குமாரின் கார் ரேஸிங் ஆவணப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியீடு….!

நடிகர் அஜித்தின் கார் ரேஸிங் பயணம் குறித்தான ஆவணப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், தீவிர கார்பந்தய வீரராகவும் உள்ளார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த கார் பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ள அஜித் கடந்த ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

ஸ்பெயினில் நடந்த கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்த அஜித்தின் அணி அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளில் கலந்து கொள்கிறது. இதற்கிடையே பிலிப் சாரியட் மோட்டார்ஸ்போர்ட் சார்பில் இந்தாண்டுக்கான ஜென்டில்மேன் ஓட்டுநர் விருதும் அஜித்துக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அஜித்தின் இந்த கார் ரேஸிங் பயணம், ஆவணப்படமாக வெளிவர உள்ளது. ‘RACING ISN’T ACTING’ தலைப்பிடப்பட்டுள்ள ஆவணப் படத்தின் க்ளிம்ஸ் வீடியோ  தற்போது வெளியாகியுள்ளது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.