வேலூரில் நியூஸ் 7 தமிழ் மற்றும் வெராண்டா IAS அகாடமியின் சார்பில் பொது அறிவு, ஐஏஎஸ் பயிற்சி மற்றும் நுழைவு தேர்வு பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நியூஸ் 7 தமிழ் மற்றும் வெராண்டா IAS அகாடமி இணைந்து பொது அறிவு, ஐஏஎஸ் பயிற்சி கருத்தரங்கு மற்றும் நுழைவு தேர்வு பயிற்சியை நடத்தின. இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நியூஸ் 7 தமிழின் மூத்த பொறுப்பாசிரியர் சரவணன், கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் அறிவழகு மற்றும் வெராண்டா ஐஏஎஸ் அகாடமியின் நிர்வாகிகள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்திய நியூஸ் 7 தமிழின் மூத்த பொறுப்பாசிரியர் சரவணன், விருந்திநர்களுக்கு பொன்னாடை போற்றியும் புத்தகங்கள் வழங்கியும் மரியாதை செய்தார்.
இந்த ஐஏஎஸ் பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் ஸ்காலர்ஷிப் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 100க்கும் மேற்பட்ட
மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதில் முதல் 10 மாணவர்களுக்கு வேலூர் மாவட்ட
ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சான்றிதழ்கள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்ததாவது..
“நம்மிடையே பல்வேறு காரணிகள் இருந்தாலும் இலக்கு மட்டும் ஒன்றாக இருக்க வேண்டும். குறுகிய காலத்தில் உங்களுடைய இலக்கை அடைய வேண்டும். அரசு பணிக்கு வர வேண்டும் என்று எனக்கு துளியும் ஆசை இல்லை. விவசாயி ஆக வேண்டும் என்பது என் ஆசை.
இதனையும் படியுங்கள்: தமிழகத்திலேயே அதிக கல்வி கடன் வழங்கும் மாவட்டம் மதுரை- நியூஸ்7 தமிழின் கல்வி கண்காட்சியில் சு.வெங்கடேசன் எம்பி பேச்சு
மாணவர்கள் அனைத்து வேலையையும் கற்று கொள்ள வேண்டும். எந்த இடத்திலும்
பின் வாங்க கூடாது. பொறுமை என்பது முக்கியம். எல்லா வேலைகளையும் தெரிந்தால் நீங்கள் சிறந்த நிர்வாகியாக வரலாம்.” என வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியை நெறியாளர் சரயு தொகுத்து வழங்கினார்.
– யாழன்