திருமணம் பற்றி வெளியான தகவல் உண்மையில்லை! – சிம்பு தரப்பு மறுப்பு

நடிகர் சிம்பு இலங்கை தமிழ்ப் பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்ளப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை என்று, சிம்புவின் ஊடக மேலாளர் ஹரிஹரன் ராஜேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக…

நடிகர் சிம்பு இலங்கை தமிழ்ப் பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்ளப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை என்று, சிம்புவின் ஊடக மேலாளர் ஹரிஹரன் ராஜேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு. இயக்குநர் டி.ரஜேந்திரனின் மகனான இவர், நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டு திரைத்துறையில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டவர். சீரிய நடிப்பால் இளைஞர் பட்டாளத்தை ஈர்த்த இவர், தற்போது என்.கிருஷ்ணா இயக்கத்தில் ’பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் வரும் மார்ச் 30ம் தேதி வெளியாகவுள்ளது.

நாற்பது வயதை நெருங்கியுள்ள இவர், இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அவ்வப்போது சில முன்னணி நடிகைகளை இவர் திருமணம் செய்யப்போவதாக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன.

இதையும் படியுங்கள் : இந்திய அளவில் டிரெண்டிங்கில் மாஸ் காட்டும் மார்டின் டீசர்..!!

அதேபோல் கடந்த சில நாட்களாக, நடிகர் சிம்பு, இலங்கைத் தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும், இருவருக்கிடையே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாகவும் பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்த தகவல் உண்மையல்ல என்று நடிகர் சிம்புவின், ஊடக மேலாளர் ஹரிஹரன் கஜேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு அவர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”நடிகர் சிம்புவுக்கு இலங்கைத் தமிழ் பெண் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக சில ஊடகங்களில் வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. திருமணம் போன்ற சில தனிப்பட்ட விஷயங்கள் குறித்த செய்திகளை, எங்களிடம் கேட்டு உறுதி செய்துவிட்டு பின் வெளியிட வேண்டும் என்று ஊடக நண்பர்களை கேட்டுக் கொள்கிறோம். திருமணம் குறித்த நல்ல செய்தி வந்தால், ஊடக நண்பர்களே முதலில் அழைக்கப்பட்டு, அவர்களிடமே முதலில் தகவல் தெரிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.