ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஏன் ஆதரவு? – எஸ்டிபிஐ தலைவர் முபாரக் விளக்கம்

எஸ்டிபிஐ கட்சியின் தேசிய, மாநில, மாவட்ட தலைவர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி சென்னை மண்ணடி பிராட்வே சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் …

எஸ்டிபிஐ கட்சியின் தேசிய, மாநில, மாவட்ட தலைவர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி சென்னை மண்ணடி பிராட்வே சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்  தலைமையில் கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அதன் பின் செய்தியாளர் சந்திப்பில், இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையில் திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி இருக்கும்போது நீங்கள் உட்பட அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் திமுகவுக்கு ஆதரவு அளிப்பது ஏன்? செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். இந்த கோரிக்கை மட்டும் கிடையாது பல்வேறு கோரிக்கைகளை தற்போது வரை முன்வைத்து வருகிறோம் என்று நெல்லை முபாரக் தெரிவித்தார்.

மேலும், ஈரோடு இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு  நாங்கள் எதற்காக  தெரிவித்தோம் என்றால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எங்களுக்கு மிகவும் நட்பானவர், அதனால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தோம் என்றார்.

அண்மைச் செய்தி: கலெக்ஷன் ஏஜெண்ட் எரித்து கொலை – சினிமா பைனான்சியர் உட்பட 4 பேர் கைது

வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் இதே நிலைபாடு இருக்குமா என்ற கேள்விக்கு, ஈரோட்டையும் நாடாளுமன்றத்தையும் ஒன்றாக வைத்து பார்க்க வேண்டாம். அப்போது, என்ன நிலைமையோ என்பதை குறித்து ஆலோசனை செய்த பிறகு நாங்கள் முடிவு எடுப்போம். தற்போது நான்காம் தூண் என்று சொல்லக்கூடிய ஊடகத்துறை பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு மத்திய மாநில அரசுகள் அவர்களுடைய பாதுகாப்புக்கு பொறுப்பேற்க வேண்டும் என முபாரக் தெரிவித்தார். மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த மாவட்டத் தலைவர்கள் அனைவரும்  பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.