நெல்லையில் பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு – சக மானவர்கள் 4 பேர் கைது!

நெல்லையில் பள்ளி மாணவனை அறிவாளாலர் வெட்டிய சகா மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் புறநகர் பகுதியான சேரன்மகாதேவியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் தன்னுடன் படிக்கும் சக மாணவி ஒருவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கூனியூர் பகுதியைச் சேர்ந்த அந்த பள்ளி மாணவனை சக மாணவியின் ஊரைச் சார்ந்த 4 பள்ளி மாணவர்கள் காதலை கைவிடுமாறு மிரட்டியதுடன் பலமுறை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதையும் மீறி பழகி வந்த மாணவனை, நான்கு மாணவர்களும் ஒன்றிணைந்து அறிவாளால் வெட்டி உள்ளனர்.

இதனால் படுகாயம் அடைந்த பள்ளி மாணவன் தற்போது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் போலீசார் நான்கு மாணவர்களையும் கைது செய்துள்ளனர்.

ஆணவக் கொலை நடைபெற்று பத்து நாட்களுக்குள் மீண்டும் பள்ளி சிறுவன் மாற்று சமூகத்தைச் சார்ந்த மாணவர்களால் வெட்டப்பட்ட விவகாரம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.