CJP கட்சி நிறுவனர் மீது தாக்குதல்…!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு எதிராக தொடங்கப்பட்ட கட்சி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி ஆகும். டிஜிட்டல் கிரியேட்டர் அபிஜீத் தீப்கே என்பவரால் உருவக்கப்பட்டுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து கரப்பான் பூச்சி மக்கள் கட்சியானது ஜூன் 6-ல் தனது முதல் போராட்டம் ஒன்றை டெல்லில் நடத்தியது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவிக்கப்படு இருந்தது. அதன் படி தொடர்ந்து பெங்களூரு, புனே, லக்னோ போன்ற நகரங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் அபிஜீத் தீபக்கே இளைஞர்கள் சிலர் தோளில் தூக்கி கொண்டு சென்றனர்.

அப்போது அபிஜீத் தீபக்கை இருவர் கன்னத்தில் அறைந்தனர். தாக்குதல் நடத்தியவர்களை அபிஜீத் தீப்கேவின் ஆதரவாளர்கள் விரட்டி அடித்தனர். இது அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.