முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-ஏ – இலங்கை-ஏ அணிகள் மோதின. தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை ஏ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்கள் எடுத்து. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யான்ஷ் ஷெட்ஜ் 66 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்து. போட்டி டிரா ஆனதால் சூப்பர் ஓவர் நடைபெற்றது. இதில் இலங்கை – ஏ அணி முதலில் பேட்டிங் செய்தது.
சூப்பர் ஒவரில் இந்திய அணி சார்பில் அர்ஷத் கான் பந்து வீசினார். இதில், இலங்கை-ஏ அணி 6 பந்துகளை எ16/0 எடுத்தது.
தொடர்ந்து 6 பந்துகளில் 17 ரன்கள் எடுக்க வேண்டி இந்திய அணி களமிறங்கியது. இலங்கை-ஏ அணி சார்பில் குகதாஸ் மதுலன் பந்து வீசினார்/
ஆனால் இந்தியா சார்பில் 9/0 ரன்களே எடுக்கப்பட்டது. இதனால், சூப்பர் ஓவர் முடிவில் இலங்கை-ஏ அணி வெற்றி பெற்றது.




