கொரோனா பரவல் அதிகமாவதால் டாஸ்மாக் பார் உள்ளிட்டவற்ற மூட வேண்டுமென வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அதிகமானதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் டாஸ்மாக், திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டது. கொரோனா பரவல் படிப்படியாக குறைய ஆரம்பித்ததை அடுத்து, ஒவ்வொன்றாக திறக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இன்று ஒரே நாளில் 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனிடையே கொரோனா பரவல் அதிகமாவதன் காரணமாக டாஸ்மாக் பார், திரையரங்குகள், வழிபாட்டு தலங்களை மூடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்துள்ள மனுவில், “பிப்ரவரிக்கு பிறகு தொற்று பரவல் 4.5 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 21ம் தேதி நிலவரப்படி, 47 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பல நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.