அதிமுக மீண்டும் வெற்றி பெறுவது உறுதி – சைதை துரைசாமி

மக்களுக்கான அரசாக செயல்பட்டுவரும் அதிமுக மீண்டும் வெற்றி பெறுவது உறுதி என சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். சென்னை ஜோதியம்மாள் நகரில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட சைதை துரைசாமி, செய்தியாளர்களை சந்தித்தார்.…

மக்களுக்கான அரசாக செயல்பட்டுவரும் அதிமுக மீண்டும் வெற்றி பெறுவது உறுதி என சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ஜோதியம்மாள் நகரில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட சைதை துரைசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சமீபத்திய கருத்து கணிப்புகள் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளதை குறித்து பேசிய அவர், கருத்து கணிப்பு முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுதவில்லை என்றார். மேலும் மக்களுக்கான அரசாக இருந்து வரும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்றும் தெரிவித்தார்.

மேலும் பொதுப்பணித்துறை அப்புறப்படுத்த முனைந்த ஜோதியம்மாள் நகரை அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அனுமதியோடு உருவாக்கியதை குறிப்பிட்ட அவர், அதற்கு நன்றி தெரிவித்து மக்கள் அக்காலத்தில் வெளியிட்ட பிரசுரத்தைக் காண்பித்து மகிழ்ந்தார். பின்னர் அங்கிருந்த சிலம்பப் பயிற்சி பெற்ற பெண்ணுடன் சிலம்பம் சுற்றினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.