முடியை நேராக்க தலையில் தீ வைத்த சிறுவன் உயிரிழப்பு!

திருவனந்தபுரத்தில் 12 வயது சிறுவன் மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டியை பயன்படுத்தி தலைமுடியை நேராக்க முயன்ற போது தீப்பற்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் வெங்கனூர் பகுதியை சேர்ந்தவர் சிவநாராயணன். இவர் 7-ம் வகுப்பு…

திருவனந்தபுரத்தில் 12 வயது சிறுவன் மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டியை பயன்படுத்தி தலைமுடியை நேராக்க முயன்ற போது தீப்பற்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் வெங்கனூர் பகுதியை சேர்ந்தவர் சிவநாராயணன். இவர் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையானவர். இதனால், அதில் வரும் வீடியோகளை பார்த்து அவற்றை முயற்சி செய்து வந்துள்ளார். ஒருநாள், தலைமுடியை நேராக்க மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டி உபயோகித்த செய்முறை வீடியோவை யூட்டியூபில் பார்த்துள்ளார்.

வீடியோவை பார்த்த பின்னர், விட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீடியோவில் செய்தது போலவே தலையில் மண்ணெண்ணெயை தேய்த்து முடியை நேராக்க தீப்பெட்டியை பயன்படுத்தியுள்ளார். இதனால் எதிர்பாராத விதமாக தலையில் தீ பற்றியுள்ளது. அப்போது வலி தாங்க முடியாமல் சிறுவன் கத்தியுள்ளான். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் நுழைந்து எறிந்துக்கொண்டிருந்த சிறுவனை பார்த்து அதிர்ச்சியுற்றனர். பின்னர் தீயை அனைத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த சிறுவனுக்கு மருத்துவர்கள் திவீர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.