தமிழ்நாட்டின் டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதில் இருந்து ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனிடையே தமிழகத்தின் புதிய டிஜிபி பதவிக்காக ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் மகேஷ் குமார் அகர்வால் ஆகிய 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான பட்டியல் யு.பி.எஸ்.சி.க்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக டெல்லியில் நடந்த கூட்டத்தில் இந்த 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல் அளித்திருந்தது. அவர்கள் 3 பேரில் ஒருவர் விரைவில் டி.ஜி.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. யார் என்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப்பைச் சேர்ந்த மகேஷ் குமார் அகர்வால், 1994ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் ஆன இவர், 2020 முதல் 2021 வரை சென்னை பெருநகர காவல் ஆணையராக பணியாற்றியிருக்கிறார். மேலும், ஆயுதப்படை ஏடிஜிபி, பிஎஸ்எப் ஏடிஜிபி உள்ளிட்ட பொறுப்புகளிலும் மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் பணியாற்றியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.