முக்கியச் செய்திகள் தமிழகம்

எய்ம்ஸ் உறுப்பினர்களாக எம்.பி.க்கள் ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்வு!

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர்களாக எம்.பி.க்கள் ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 2019ஆம் ஆண்டு தொடக்கத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த மருத்துவமனையின் தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவராக இருந்த வி.எம்.காடோச் கடந்த அக்டோபர் மாதம் நியமனம் செய்யப்பட்டார். மேலும் 4 நிர்வாக உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ்க்கான உறுப்பினர்களில் மக்களவையின் இரண்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க கடந்த 12ம் தேதி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. உறுப்பினர் பதவிக்கு தேனி எம்.பி ரவீந்திரநாத், மதுரை எம்.பி வெங்கடேசன், விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் போட்டியிட்டனர்.

எனினும், மதுரை எம்.பி வெங்கடேசன் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றுக் கொண்டார். இதனால் எய்ம்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் ஆகியோர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதுகுறித்து ரவீந்திரநாத் கூறும்போது, “எய்ம்ஸ் உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். உறுப்பினர் என்ற முறையில் தென் மாவட்ட மக்களின் நலனுக்காக எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த தேவையான நடவடிக்கை எடுப்பேன்” என்று தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

சிவகளையில் அருங்காட்சியகம் அமைக்க முதலமைச்சர் நடவடிக்கை: தங்கம் தென்னரசு

Ezhilarasan

சிலிண்டருக்கு மாலை அணிவித்து எதிர்ப்பை தெரிவித்த எம்.பி

Janani

நோய் தொற்றை தடுக்க விலங்குகளுக்கு தடுப்பூசி

Vandhana