பழனி அருகே,பெரியதுரை கருப்பண்ணசாமி கோயில்,சித்திரைத் திருவிழாவில், கிராம மக்கள் 300 ஆடுகளை பலியிட்டு சாமி வழிபாடு செய்தனர்.
பழனி அருகே கணக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள கோம்பை பட்டி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பெரிய துரை கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவை முன்னிட்டும் மாதம் மும்மாரி மழை பெய்யக் வேண்டி கிராம மக்கள் கிடாய் வெட்டி சாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இவ்விழா சரிவர நடக்காத நிலையில், இந்த ஆண்டு இக்கோயிலில் 300 ஆடுகளை பலியிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில், கணக்கன்பட்டி, மஞ்ச நாயக்கன்பட்டி, எரும நாயக்கன்பட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட, கிராம மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இதன் மூலம் தங்கள் நேர்த்திக்கடன் நிறைவேறுவதாக,கிராம மக்கள் நம்புகின்றனர். 42 ஆண்டுகளாக தொடர்ந்து, இவ்விழா கோம்பைப்பட்டி கிராமத்தில் நடைபெற்று வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா








