OTT-ல் வெளியாகும் ’விடுதலை’ பாகம் 1 ; எப்போது, ​​எங்கு பார்க்கலாம் ?

விடுதலை பாகம் 1  ஏப்ரல் 28 ஆம் தேதி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான Zee5 இல் திரையிடப்பட உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. அசுரன் திரைப்படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’ எனும்…

விடுதலை பாகம் 1  ஏப்ரல் 28 ஆம் தேதி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான Zee5 இல் திரையிடப்பட உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

அசுரன் திரைப்படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’ எனும் படத்தை  வெற்றிமாறன் இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு ’விடுதலை’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 2 பாகங்களாக எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம், கடந்த மார்ச் 31ம் தேதி வெளியானது.

இந்த படத்தை இன்போடைமெண்ட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம்  வழங்குகிறது. வழக்கமாகக் காமெடியனாக நடிக்கும் சூரி, இந்தப் படத்தில் போலீசாகவும், கைதியாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் நல்ல வரவேற்பையும் வாழ்த்தையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், விடுதலை 1 திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான Zee5 இல் திரையிடப்பட உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. படம் வெளியாகி ஒரு மாத காலமே ஆன நிலையில் ஓடிடியில் வெளியிடப்படவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.