சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த S.V.கங்காபூர்வாலா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி ஓய்வு பெற்றார். அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமிக்கப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பணியாற்றி வந்த நிலையில், பம்பாய் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள S.V.கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் முன்னதாக பரிந்துரை செய்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த மே 24 ஆம் தேதி, 8 மாதங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த டி.ராஜா பணி ஒய்வு பெற்றார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்த நீதிபதி S.V.கங்காபூர்வாலாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.