முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள் Instagram News

ரூ56கோடியே 82லட்சம் மோசடி -ஐஎஃப்எஸ் நிர்வாக இயக்குனர் உட்பட 10 பேருக்கு பிடிவாரன்ட்

அதிக வட்டி தருவதாக கூறி 56கோடியே 82லட்சம் ரூபாய் மோசடி செய்த ஐ.எஃப்.எஸ். நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிக வட்டி தருவதாக கூறி 56 கோடியே 82 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில்,
ஐ.எஃப்.எஸ். நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், நிர்வாகிகள் உள்ளிட்ட 10
பேருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து சென்னை நிதிநிறுவன மோசடி வழக்குகளை
விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த
இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீஸ் எனும் ஐ.எஃப்.எஸ். நிறுவனம், முதலீடு
செய்யும் தொகைக்கு, 10 முதல் 25 சதவீதம் வரை மாதந்தோறும் வட்டி
தருவதாகக்கூறி, 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாகக்
கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, 200 முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், 56 கோடியே 82
லட்சத்து 89 ஆயிரத்து 879 ரூபாய் மோசடி செய்ததாக, ஐ.எஃப்.எஸ் மார்க்
ஆப்பர்சூனிட்டி டெவலப்மென்ட் லிமிடெட் உள்பட ஆறு நிறுவனங்கள் மற்றும்
இயக்குனர்கள், நிர்வாகிகள், ஊழியர்களுக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு
போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்கு தொடர்பாக, நிறுவன இயக்குனர் மோகன்பாபு, நிர்வாகிகள் சரவணகுமார்,
குப்புராஜ், ஜெகனநாதன் உள்ளிட்ட 13 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்
கைது செய்தனர்.

இதனையும் படியுங்கள் : போதைப் பொருளுக்கு எதிரான இயக்கம்; நடிகர் விஜய் சேதுபதி கையெழுத்து

நிதி நிறுவன மோசடி வழக்கு; இருவருக்கு 27 ஆண்டுகள் சிறை | News7 Tamilசென்னையில் உள்ள நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு
நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது,
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேர் மட்டும் ஆஜராகினர். 10 பேர்
ஆஜராகவில்லை. இவர்களை கைது செய்து பிப்ரவரி 28 ம் தேதி ஆஜர்படுத்தும்படி
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி
உத்தரவிட்டுள்ளார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரஜினி – மோகன்பாபு நட்பு தூய்மையானது, ஆழமானது: நடிகை லட்சுமி மன்சு !

Halley Karthik

’வந்த கண்ணனும், நின்ற கந்தனும்…’

Arivazhagan Chinnasamy

பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்பு : ஆசிரியையின் அதிர்ச்சி தகவல்

Niruban Chakkaaravarthi