சர்ச்சைக்குள்ளான எல்பிடபிள்யூ அவுட் – அதிர்ச்சியடைந்த விராட் கோலி

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர்…

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டெல்லியில் அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் நிறைவடைவதற்குள் 263 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடியது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் விராட் கோலி  44 ரன்கள் எடுத்திருந்த போது எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். ஆனால் அவரது அவுட் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைச் செய்தி: அக்சரின் சிறப்பான ஆட்டம்… இந்திய அணி 262 ரன்கள் குவிப்பு…

ஆஸ்திரேலிய வீரர் குஹ்ரிமேன் வீசிய பந்தில் விராட் கோலி எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். ஆனால் குஹ்ரிமென் வீசிய பந்து கோலியின் பேட்டுக்கும் பேடுக்கும் இடையில் பட்டநிலையில் நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் விராட் கோலி மூன்றாவது நடுவரிடம் ரிவ்யூ கேட்டார். மூன்றாம் நடுவரும் களத்தில் இருந்த நடுவரின் முடிவை போன்றே அவுட் கொடுத்தார்.

பிறகு பெவிலியனுக்கு திரும்பிய பிறகு அங்கு அமர்ந்திருந்த இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் தான் அவுட் ஆனது குறித்து பேசிக்கொண்டிருந்தார். பிறகு அவரது அவுட் ஆனது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட போது அதை பார்த்து விராட் கோலி கொடுத்த ரியாக்‌ஷன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.