“புயல் பாதிப்புகளை சரி செய்ய உடனடியாக ரூ.2,000 கோடி நிதியை விடுவிக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து உடனடியாக ரூ.2,000 கோடியை விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். ஃபெஞ்சல்…

“Rs. 2,000 crore should be released immediately to repair the damage caused by the cyclone” - Chief Minister M.K. Stalin's request!

ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து உடனடியாக ரூ.2,000 கோடியை விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய உடனடியாக ரூ.2,000 கோடி விடுவிக்க பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். சேதத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து உடனடியாக ரூ.2,000 கோடியை விடுவிக்க வேண்டும் எனவும், இதுவரை கண்டிராத அளவில் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களை ஃபெஞ்சல் புயல் சூறையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை கண்டிராத அளவில் ஃபெஞ்சல் புயல் சூறையாடியுள்ளது. இதனால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.11 லட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. சேதத்தின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து உடனடியாக 2000 கோடி ரூபாயை அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொள்கிறேன்”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.