மகளிருக்கு ரூ.1000 – அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட ஆலோசனை!!

இன்னும் 4 நாட்களில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், திட்டத்தின் இறுதிக்கட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம்…

இன்னும் 4 நாட்களில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், திட்டத்தின் இறுதிக்கட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர் உள்ளிட்ட பல தரப்பினர் பயன் பெறுவார்கள்.

இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பப் படிவங்கள் நியாய விலைக் கடை பணியாளர்கள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதுவரை மாநிலம் முழுவதும் 1.63 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : VJS50: வெளியானது விஜய் சேதுபதியின் “மகாராஜா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, திட்ட சிறப்பு அதிகாரி இளம் பகவத் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.