கோயில் முன் சிறுநீர் கழித்ததை தட்டி கேட்ட சிறுவன் கார் ஏற்றி கொலை – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!!

கேரளாவில் கோயில் முன்பு சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்ட 15 வயது சிறுவன் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே காட்டகடை பூவச்சல் பகுதியை சேர்ந்தவர் ஆதி சேகர்(15).…

கேரளாவில் கோயில் முன்பு சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்ட 15 வயது சிறுவன் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே காட்டகடை பூவச்சல் பகுதியை சேர்ந்தவர் ஆதி சேகர்(15). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 30 ஆம் தேதி பள்ளி முடிந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்ற சிறுவன் ஆதி சேகர் கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில் நாலாஞ்சிரா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது சிறுவன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், கோயில் முன்பு சிறுநீர் கழித்த பிரிய ரஞ்சன் என்பவரை தட்டிக்கேட்டதால் சிறுவன் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதையும் படியுங்கள் : ”மறக்குமா நெஞ்சம்” – குளறுபடிக்கு பொறுப்பேற்று ரசிகர்களுக்கு விரைவில் சர்பிரைஸ் தருவதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு!

இதனை தொடர்ந்து பிரிய ரஞ்சன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.