#RoadAccident | திருப்பதி அருகே பயங்கர விபத்து… 4 பேர் உயிரிழப்பு!

திருப்பதி அருகே லாரி ஒன்று கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் கலக்கடாவில் இருந்து தக்காளி ஏற்றிய லாரி…

#RoadAccident | Terrible accident near Tirupati... 4 people died!

திருப்பதி அருகே லாரி ஒன்று கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் கலக்கடாவில் இருந்து தக்காளி ஏற்றிய லாரி ஒன்று
சென்னை நோக்கி வந்து சென்று கொண்டிருந்தது. அந்த லாரி சந்திரகிரி – திருப்பதி இடையே உள்ள பாக்கராப்பேட்டை மலை பாதையில் வரும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றின் மீது மோதி கவிழ்ந்தது.

கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது அந்த லாரி கவிழ்ந்த நிலையில் கார் நொருங்கியது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். லாரி அடியில் சிக்கிய ஒரு நபரின் கைகள் மட்டும் தெரிந்த நிலையில், அவர் கையை ஆட்டி உதவி கேட்ட சம்பவம் காண்போரை கலங்கச் செய்தது.

தக்காளி லோடு ஏற்றி வந்த லாரி அதிவேகத்தில் சென்றதே இந்த விபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.