நின்றிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒய்வு பெற்ற இரானுவ வீரர் பலி

மானாமதுரை அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர், இருசக்கர வாகனத்தில் வரும்போது நின்றிருந்த லாரி மீது மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சாஸ்தா நகரைச் சேர்ந்தவர் ஒய்வு…

மானாமதுரை அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர், இருசக்கர வாகனத்தில் வரும்போது நின்றிருந்த லாரி மீது மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சாஸ்தா நகரைச் சேர்ந்தவர் ஒய்வு பெற்ற இரானுவ வீரரான உதய் சங்கர்.

நாற்பது இரண்டு வயதான இவர், சிவகங்கையில் இருந்து மானாமதுரையில் உள்ள தனது வீட்டிற்க்கு வரும் போது, நத்தப்புரக்கி விளக்கு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராமல் மோதியதில் சம்பவ இடத்திலே பலியானர். இந்த விபத்து குறித்து சிப்காட் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சௌம்யா.மோ

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.