கன்னியாகுமரியில் ரமலான் நாட்களில் நோன்பு கஞ்சி வைப்பதில் இரு பிரிவினர்
இடையே பிரச்சனை போலீசார் முன்னிலையில் கை கலப்பில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு.
கன்னியாகுமரி மெயின் ரோட்டில் மீராசா ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. இங்கு தொழுகை நடத்துவதில் இரு தரப்பினர் இடையே சில வருடங்களாக பிரச்சனை இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு ரமலான் நோன்பு தொடங்கியுள்ள நிலையில், நோன்பு கஞ்சி
வைப்பதில் இரு தரப்பினர் இடையே இன்று பிரச்சனை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல்
அறிந்து அங்கு வந்த கன்னியாகுமரி போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து
பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் போலீசார் முன்னிலையில் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட முயன்றனர். பின்னர் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் கன்னியாகுமரி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ரெ.வீரம்மாதேவி
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்