திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்- மத்திய அமைச்சர் எல்.முருகன்

திமுக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருப்பதி கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். விஐபி…

திமுக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருப்பதி கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்ட அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோவில் வேத பண்டிதர்கள் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு வேத ஆசி வழங்கினர்.

பின்னர் ஏழுமலையானை தரிசனம் செய்து வெளியில் வந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், திமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. திமுக அரசின் பட்ஜெட் மக்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இல்லை. கடந்த பட்ஜெட்டில் பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, அரசு முழுவதுமாக செலவு செய்யவில்லை. இது பற்றி எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சட்டமன்றத்தில் கேள்விகள் இருக்கிறார்.

தேர்தல் சமயத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் தலா 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால் இப்போது தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அரசு கூறுகிறது.

இந்த விஷயத்தில் அவர்கள் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற
வேண்டும். ராகுல் காந்தியின் தகுதி இழப்பு விஷயம் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து
முழுக்க முழுக்க சட்டப்படி நடைபெற்றுள்ளது என்று அப்போது அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.