2026-27-ஆம் ஆண்டுக்காண தமிழ்நாடு பொது மற்றும் வேளாண் பட்ஜெட் கடந்த ஆகஸ்ட் 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் மூன்று நாட்கள் நடந்துள்ளது. இதனிடையே தமிழ்த்தாய் வாழ்த்து, நீட் தேர்வு, எஃப்.சி.ஆர்.ஏ உள்ளிட்டவை குறித்து தீர்மானங்கள் நறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில் இன்று நான்காவது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. முன்னதாக முதலமைச்சர் விஜய் தொகுதி முறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “ நம்ம குடும்பத்தில் இருக்கக்கூடிய அம்மா தங்கச்சி பாட்டி அவர்களைப் பத்தின ஒரு தீர்மானம் அவர்களைப் பற்றி பேசுவதற்கு நமது மனசிலிருந்து இதயத்தில் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றேன். இதற்கு முன்னாடி இந்த விஜய்க்கு கிடைச்ச இடத்திற்கும் இப்போது கிடைத்து இருக்கின்ற இடத்திற்கும் மிகப்பெரிய காரணமாக இருந்தது என்னுடைய பாட்டி தங்கச்சிகள் அம்மாக்கள் தான் என கூறினார்.
அவர்களோடு மீதி இருக்கக்கூடிய நன்றி விசுவாசத்திற்கு தான் நான் இங்கு இருந்து பேசிக் கொண்டிருக்கின்றேன். எல்லோரும் சொல்வார்கள் பணம் இருந்தால் வீட்டிற்கு பொருளாதாரம் இருந்தால் நாட்டுக்கும் மிகப்பெரிய பெயர் வந்து தான் என நினைக்கலாம். உண்மையாகவே அந்தப் பெயர் அந்த வீட்டுப் பெண்கள் தனிப்பட்ட முறையில் உயர்ந்தால் தான் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்ல பெயர் கிடைக்கும்.
தமிழ்நாட்டில் எல்லா காலத்திலும் பெண் ஆளுமைகள் இருக்கிறார்கள். பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள் அதே போல் அரசியலிலும் அவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். இந்த ஒதுக்கீடு அவர்களுக்கு சலுகை என்று நினைத்து விடக்கூடாது அது ஒரு சமூக நீதிக்கான ஒரு முன்னெடுப்பாகும். அனைத்து நிலைகளும் பெண்களுக்கான சம உரிமைகளை வழங்க வேண்டும்,. தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது 2001 சட்டப்பேரவையில் 12 பெண்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்கள் தற்போது 2026 ஆண்டு 25 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிர் என மூன்றில் ஒரு பங்கு தொகுதி செய்து கட்டம் நிறைவேற்றப்பட்டிருந்த போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் காலதாமதினால் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது நோக்கம் நிறைவேறாமல் காலம் தாழ்த்தப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது இது பெண்களின் அரசியல் உரிமையை மறுக்கும் செயலாகும் எனவே மகளிர்கான தொகுதி ஒதுக்கீட்டை மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே இணையத்தில் அதனை மேற்படி ஒத்தி வைக்க கூடாது. உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு இருப்பதால்தான் ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு தொகுதி மறு வரை தொடர்பாக கால தாமதம் ஏற்படுவதால் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை ஒத்திவைக்க கூடாது அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் . தொகுதி மறு வரை தொடர்பாக கடந்த வாரம் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் விசிக இந்தியன் யூனியன் முஸ்லிம் பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், அதில் தொகுதி மறு வரை தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது , அதில் சட்டமன்றத்தில் இதற்காக தனி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த மசோதா நிறைவேறினால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் 50% நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகரிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அவ்வாறு செய்த பிறகு 2026 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைவார்கள். இதனால் தென் மாநிலம் மக்கள் மிகவும் பாதிக்கப்படுவாக குறிப்பாக தென் மாநிலத்தில் மக்கள் தொகை படுத்தப்பட்டுள்ளது. தற்போது மக்களவை உறுப்பினர்கள் 543 என்ற எண்ணிக்கையினை தொடர வேண்டும். தற்போது உள்ள மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையே இது தொடர வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.




