தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தொகுதி முறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் செல்லசாமி, “இந்த தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அன்போடு வரவேற்கிறோம். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தண்டனை ஏன் கொடுக்க முயற்சி சொல்கிறது.
இஸ்லாமிய சிறுபான்மையிய மக்கள் அதிக வாழக்கூடிய இடங்களில் வெற்றி பெற முடியாது என்ற காரணத்தினால் இது போன்ற கொண்டு வந்தால் அவர்கள் எளிதில் வெற்றி பெற முடியும் என்ற காரணத்தினால் இதுபோன்ற சட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது.
நாடாளுமன்றத்தில் 543 பேருக்கு தற்போது பேச நேரம் கிடைக்கவில்லை அது அதிகரிக்கும் பொழுது பேச நேரம் கிடைக்காது.
மக்கள் தொகை கணக்கெடுக்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை 543 எண்ணிக்கையில் மகளிருக்கு 33 சதவீதம் எண்ணிக்கையை மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்.
முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தனி தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




